Posts

Showing posts from May, 2016

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஐந்து

Image
                                   பாதாள கோவில் அடுத்து சென்றது தாமரை மஹால். இந்த கட்டிடத்தின் வடிவம் தாமரை பூ போன்ற அமைப்பைப் பெற்றது. இந்த மஹால் என்பது இளவரசி குளிப்பதற்காக கட்டிய அரண்மனையாகும். உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை.                                              பச்சை புல்வெளியில் மிக நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடடம் சுண்ணாம்பு கலவைக்கொண்டு கட்டப்பட்டது. எப்போதும் போல கட்டிடத்தின் சுவற்றில் காதல் கிறுக்கல்கள். தாமரை இலை போன்று அமைக்கப்பட்டு தண்ணீர் அதனைச்சுற்றி இருக்கும்படி வடிவமைத்துள்ளனர்.     யானை மண்டபம்:                                  ராணி மண்டபத்திர்க்கு அருகிலேயே யானைகள் இளைப்பார ஒரு மண்டபம் அமைத்துள்ளனர். மிக நீளமான மண...

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி நான்கு

Image
                            விருபாகஷா கோவிலிற்கு அருகில் ஒரு இரண்டு அல்லது நான்கு km தொலைவில் "கடாலே களு கணேசா" மண்டபம் போன்று ஒரு இடத்திருக்கு சென்றோம். வெயில் மிக அதிகமாக இருந்ததனால் சுற்றுலா பயணிகள் குறைவானவர்களாகவே இருந்தார்கள்.                   அங்கிருந்து அடுத்து சென்றது "லக்ஷ்மி நரசிம்ஹா விக்ரஹா". இந்த சிலை கர்நாடக மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் இந்த சிலையின் ஓவியத்தைப் பார்க்கலாம். இந்த சிலையின் வரலாறு விக்கிபீடியாவில் தெரிந்துகொள்ளலாம்.     இதற்கு அருகிலேயே நீரில் எப்போதும் சூழ்ந்துள்ள சிவலிங்கம் ஒன்று உள்ளது.  அதற்கு அடுத்தது சென்றது பாதாள கோவில். பராமரிப்பு என்பது UNESCO மூலம் நடக்கிறது. அவ்வளவே. மற்றபடி பூஜை என்பதெல்லாம் கிடையாது. ***********************************************(தொடரும்)*************** (தங்களின் பின்னூட்டத்தை எதிர்பார்க்கும் திசைதென்றல்) ...

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று

Image
                                              பனிரெண்டு நபர்கள் அமரும் வண்டி.. ஏழு நபர்கள் மட்டுமே பயணித்தோம். அதுவே எங்களுக்கு வசதியாக இருந்தது. எங்களுடன் அந்த சுற்றுலா மைய அதிகாரியும் இணைந்து கொண்டார்.                             போகும் வழியில் இன்னொரு சுற்றுலா வழிகாட்டி ஏறிக்கொண்டார். சுற்றுலா மைய அதிகாரி போகும் வழியில் இறங்கிக்கொண்டார். சுற்றுலா வழிகாட்டி தமிழ் மற்றும் கன்னடா மொழி பேசிக்கொண்டு வந்தார். அவர் பேசும் தமிழ் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. முதலில் பார்க்கச் சென்றது விருபாக்சா கோவில்.                        பழமையான கோவில். பார்க்கும்போது தெரிந்தது. சிறிது சிதிலம் அடைந்திருந்தது. வெளியே புகைப்படக் கருவிக்கு கட்டணம் உண்டு. வழிகாட்டி கோவிலின் சிறப்பை விவரித்துக்கொண்டே வந்தார்.         ...