ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று
பனிரெண்டு நபர்கள் அமரும் வண்டி.. ஏழு நபர்கள் மட்டுமே பயணித்தோம். அதுவே எங்களுக்கு வசதியாக இருந்தது. எங்களுடன் அந்த சுற்றுலா மைய அதிகாரியும் இணைந்து கொண்டார். போகும் வழியில் இன்னொரு சுற்றுலா வழிகாட்டி ஏறிக்கொண்டார். சுற்றுலா மைய அதிகாரி போகும் வழியில் இறங்கிக்கொண்டார். சுற்றுலா வழிகாட்டி தமிழ் மற்றும் கன்னடா மொழி பேசிக்கொண்டு வந்தார். அவர் பேசும் தமிழ் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. முதலில் பார்க்கச் சென்றது விருபாக்சா கோவில். பழமையான கோவில். பார்க்கும்போது தெரிந்தது. சிறிது சிதிலம் அடைந்திருந்தது. வெளியே புகைப்படக் கருவிக்கு கட்டணம் உண்டு. வழிகாட்டி கோவிலின் சிறப்பை விவரித்துக்கொண்டே வந்தார். ...