ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி இரண்டு
தொடர்வண்டி நிலையத்தில் இருந்து சற்று அருகிலேயே அறை வேண்டும் என கூறியதால் இரண்டு km உள்ளேயே அரை இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன். ஹம்பி பார்க்க முடிவு செய்தவுடன் நாங்கள் கர்நாடகா மாநில சுற்றுலா தளத்தைத் தொடர்புகொண்டு ஒரு நாள் சுற்றுலா வேண்டும் என தீர்மானித்துக் கொண்டோம். (விடுமுறை கருத்தில் கொண்டு). www.karnatakaholidays.net என்ற இணைய தளத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் மட்டும் வேண்டும் என்றால் அதற்கேற்றார் போல் சுற்றுலா தொகுப்பு உள்ளது. நம் வசதிக்கு ஏற்ப சுற்றலா தொகுப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கர்நாடகா சுற்றுலா மையத்தை நேரிடையாக தொடர்பு கொண்டதால் அவர்கள் எந்த விதமான முன்பணமும் வாங்கவில்லை. சுற்றுலா தினத்தன்று கட்டணம் செலுத்தினால் போதுமானது. அவர்களிடம் ஒரே விதி, பயணிகள் குறைந்த பட்சம் பனிரெண்டாவது சேர்ந்தால் தான் பேருந்து இயக்குவார்கள் என இணையதளத்தில் கூறியிருந்தனர். ஆனால் நடந்தது வேறு. அறை நன்கு வசதியாக இருந்தது. மூவரு...