ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு


                      தாமரை மஹால் அடுத்து சென்ற இடம் ஹசார ராமா கோவில். இந்த கோவிலைப் பற்றி நான் இந்த பயணத்தின் ஆரம்பத்திலேயே சிறு குறிப்பு ஒன்று கூறியிருந்தேன். அது என்னவென்றால் ஓர் திரைப்பட பாடலில் இந்த ஹம்பி பகுதியின் அனைத்து இடங்களையும் காண்பித்திருப்பார்கள் என்று. அது "என் சுவாச காற்றே" படத்தில் இருந்து "தீண்டாய்" பாடல்.



      ராஜா தர்பார் நடத்துவதற்காக மிகப் பெரிய அரண்மனையைக் கட்டியிருக்கிறார்கள். ராஜா, மந்திரிகள், அவை பெரியோர்கள் அமருவதற்காக மிக நீளமான மற்றும் அகலமான மேடை போன்று அமைத்துள்ளார். 



   
        அங்கிருந்து சற்று அருகில் நீர் சேகரிப்பதற்காக மிகப் பெரிய குளம் ஒன்றை மிக திட்டமிடலுடன் அமைத்துள்ளனர்.  


ஓர் தந்தத்தை இழந்த யானையை மிக மெதுவாக விரல்களால் சுண்டினால் ஸ்வரங்கள் மீட்டுகின்றன. 

     மேலே உள்ள காணொளியில் மூன்று விதமான கற்கள் உலோகங்களால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லினை சுண்டும்போதும் ஒவ்வொரு சப்தங்களை எழுப்புகின்றன. இந்த விஷயமெல்லாம் நாங்கள் சுற்றுலா வழிகாட்டியை நாடியதால் தெரிய முடிந்தது. 

     

                 

மேலே உள்ள இந்த நீர் தேக்கம் தான் அந்த பாடலில் பிரதானமான இடமாக காண்பித்திருப்பார்கள்.  இந்த வடிவமைப்பே ஹம்பி சுற்றுலா தளத்தைப் பார்க்க வேண்டுமென ஆர்வமூட்டியது.  யாரும் கீழே இறங்காத வண்ணம் காவலுக்கு ஆட்களை அமர்தியுள்ளனர்.







  மேலே வாய்க்கால் போன்ற அமைப்பை கிட்டத்தட்ட ஒரு பல்லாங்கு தூரத்தில் இருந்து அமைத்து நீரினை இந்த குளத்தில் வந்து விழுமாறு வடிவமைத்துள்ளனர். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. 

   ராஜா தர்பார் நடக்கும் இடத்தின் சில புகைப்படங்கள்:






மேலே உள்ள படம் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ஏற்படுத்தியது. கதவுகளின் குந்து, தாழ்பாள், துவாரம் என அனைத்தும் கல்லினால் குடைந்து உபயோகித்துள்ளனர்.



*******************************************(தொடரும்)********************

(தங்களின் பின்னூட்டமே என்னை அதிகமான இடங்களைப் பார்த்து பகிர தூண்டும் ...............)

Comments

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4

தஞ்சைப் பெரிய கோவில் பகுதி 1