ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி இரண்டு



                      தொடர்வண்டி நிலையத்தில் இருந்து சற்று அருகிலேயே அறை வேண்டும் என கூறியதால் இரண்டு km உள்ளேயே அரை இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன். ஹம்பி பார்க்க முடிவு செய்தவுடன் நாங்கள் கர்நாடகா மாநில சுற்றுலா தளத்தைத் தொடர்புகொண்டு ஒரு நாள் சுற்றுலா வேண்டும் என தீர்மானித்துக் கொண்டோம். (விடுமுறை கருத்தில் கொண்டு). www.karnatakaholidays.net என்ற இணைய தளத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் மட்டும் வேண்டும் என்றால் அதற்கேற்றார் போல் சுற்றுலா தொகுப்பு உள்ளது. நம் வசதிக்கு ஏற்ப சுற்றலா தொகுப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கர்நாடகா சுற்றுலா மையத்தை நேரிடையாக தொடர்பு கொண்டதால் அவர்கள் எந்த விதமான முன்பணமும் வாங்கவில்லை. சுற்றுலா தினத்தன்று கட்டணம் செலுத்தினால் போதுமானது. அவர்களிடம் ஒரே விதி, பயணிகள் குறைந்த பட்சம் பனிரெண்டாவது சேர்ந்தால் தான் பேருந்து இயக்குவார்கள் என இணையதளத்தில் கூறியிருந்தனர். ஆனால் நடந்தது வேறு. 

                   அறை நன்கு வசதியாக இருந்தது. மூவரும் சுற்றுலா மையத்திற்கு  செல்ல தயாரானோம். 


                                       



                                      அருகில் உள்ள சிற்றுண்டியில் உணவருந்திவிட்டு சென்றோம். கர்நாடகா சுற்றுலா மையமும் நாங்கள் தங்கி இருந்த அறையும் மிக அருகில் தான் இருந்திருக்கிறது. நாங்கள் செல்வதற்கு முன்பே ஒரு குடும்பத்தினர் சுற்றுலா நிர்வாகியிடம் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார். 

                                       


கீழே பத்ரி மற்றும் காசி



                   அந்த குடும்பத்தினர் மொத்தம் நன்கு பேர். கணவன், மனைவி, ஒரு சிறுமி, அவர்களுடைய பாட்டி. நாங்கள் மூன்று பேர் என மொத்தமாக ஏழு பேர் மட்டுமே அன்று ஹம்பி செல்ல வந்திருந்தோம் என தெரிந்தது. பயணிகள் குறைவாக இருப்பதனால் ஒரு 1500 ருபாய் ஏழு நபர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நிர்வாகத்தினர் கூறியிருக்கிறார்கள். அதற்காக தான் அந்த குடும்பத்தார் விவாதித்திருக்கின்றனர். பார்க்கக் கூடிய இடங்கள் அனைத்தும் மிக அற்புதமானவை. ஆகையால் 1500 பகிர்ந்து கொள்ளுதல் கண்டிப்பாக மதிப்பானது தான் என மனம் கூறியது. காலம் விரைந்து களிந்துகொண்டிருந்ததால் நாங்கள் அனைவரும் அந்த 1500 ருபாய் பகிர்ந்து கொண்டு ஆயத்தமானோம். 

                           அந்த கர்நாடக சுற்றுலா நிர்வாகத்தினர் மிக மரியாதையாக பயணிகளை நடத்தினார். எங்களிடமோ அல்லது அந்த குடும்பத்தாரிடமோ கோபமாக எரிந்துவிழவில்லை. 1500 ருபாய் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை மிக சாந்தமாக பொறுமையாக எங்களிடம் சங்கடத்துடன் எடுத்து கூறினார். எங்களுடைய நோக்கமும், அந்த குடும்பத்தாருடைய நோக்கமும் நேரம் கடக்கும் முன் இடங்களைப் பார்க்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்ததால் எங்களால் சுமூகமாக பயணத்தை ஆரம்பிக்க முடிந்தது. 

           ************************************************(தொடரும்)***************

உங்களது பின்னூட்டமே என்னை அதிகமாக பயணிக்க வைக்கும். 

Comments

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4