தஞ்சைப் பெரிய கோவில் பகுதி 2
கோவிலின் உள் வட்டாரத்தின் ஒரு பகுதியில் பட்டுப்புடவைகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். விலை மிகக் குறைவாக. ஒலிபெருக்கியில் ஏலம் நடத்திக்கொண்டிருந்தார்கள். இது அரசாங்கமே எடுத்து நடத்திக்கொண்டிருந்தது. என்னுடன் பயணித்தவர் ஐயாயிரம் விலை மதிப்புள்ள பட்டுப் புடவையை ஆயிரத்து முந்நூறு என வாங்கினார். இந்த புடவைகள் சிலையின் மீது சாத்தியவைகள். ஒன்றோ இரண்டோ முறை மட்டுமே உபயோகப்படுத்தியது. வழியில் நடந்து செல்ல கம்பளம் விரிப்பு விரித்திரிந்தார்கள். நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு வெயிலின் சூடு பாதத்தில் தெரியாமல் இருக்கு தண்ணீர் இறைத்திருந்தார்கள். கோவில் உட்புறத்தின் தோற்றம்...கீழே..... உள்ளே பெரிய நந்தியின் பக்கம் செல்ல முடியவில்லை. காரணம் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. உள்ளே நடந்து செல்ல செல்ல நம் மனதில் இனம் புரியாத ஒரு அமைதி வந்து உட்கார்ந்துக் கொள்கிறது. அமைதியைக் குலைக்கும் விதமாக முனு முனுவென கூட்டம். முன்டியடித்துக்கொண்டு நீளமாக கட்டிய கயற்றை உதறிக்கொண்டு ஈசனை வழிபட முயன்றனர். எந்த கோவிலின் உள்ளே சென்றாலும் தலைவாசலின் அகன்ற படியைத