தஞ்சைப் பெரிய கோவில் பகுதி 2

கோவிலின் உள் வட்டாரத்தின் ஒரு பகுதியில் பட்டுப்புடவைகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். விலை மிகக் குறைவாக. ஒலிபெருக்கியில் ஏலம் நடத்திக்கொண்டிருந்தார்கள். இது அரசாங்கமே எடுத்து நடத்திக்கொண்டிருந்தது. என்னுடன் பயணித்தவர் ஐயாயிரம் விலை மதிப்புள்ள பட்டுப் புடவையை ஆயிரத்து முந்நூறு என வாங்கினார். இந்த புடவைகள் சிலையின் மீது சாத்தியவைகள். ஒன்றோ இரண்டோ முறை மட்டுமே உபயோகப்படுத்தியது.  வழியில் நடந்து செல்ல கம்பளம் விரிப்பு விரித்திரிந்தார்கள். நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு வெயிலின் சூடு பாதத்தில் தெரியாமல் இருக்கு தண்ணீர் இறைத்திருந்தார்கள்.






கோவில் உட்புறத்தின் தோற்றம்...கீழே.....





உள்ளே பெரிய நந்தியின் பக்கம் செல்ல முடியவில்லை. காரணம் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. 






உள்ளே நடந்து செல்ல செல்ல நம் மனதில் இனம் புரியாத ஒரு அமைதி வந்து உட்கார்ந்துக் கொள்கிறது.  அமைதியைக் குலைக்கும் விதமாக முனு முனுவென கூட்டம். முன்டியடித்துக்கொண்டு நீளமாக கட்டிய கயற்றை உதறிக்கொண்டு ஈசனை வழிபட முயன்றனர். எந்த கோவிலின் உள்ளே சென்றாலும் தலைவாசலின் அகன்ற படியைத்தாண்டும்போது ஒரு வித ஈர்ப்பு உண்டாகும். இந்தக் கோவிலிலும் அவ்வாரே தோன்றியது. இந்தப் படியை எத்தனை பெரிய மனிதர்கள் தாண்டி சென்றுள்ளனர். ராஜ ராஜ சோழன், அவருடைய குடும்பங்கள், பரம்பரைகள், அமைச்சர்கள், கோவில் கட்டியர்கள், அந்த கால மக்கள், வீரர்கள். இதை நினைக்கும்போதே மனம் பூரிப்படைகிறது. 
கருவறையின் உள்ளே வீற்றிருக்கும் சிவலிங்கம் தான் உலகிலேயே மிக நீளமான லிங்கமாம். விக்கிபீடியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே செயற்கை ஒளி கிடையாது. விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். ஒரு நிமிடம் சிவாஜி நடித்த ராஜ ராஜ சோழன் திரைப்படம் நம் கண்முன்னே வந்து செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.


                இருகை கூப்பி மனமுருக வணங்கினேன். மக்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. காரணம் சென்றது ஞாயிற்றுக்கிழமை. ஒருவழியாக உட் ப்ரகாரத்தைவிட்டு வெளியில் வந்தடைந்தேன். தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரம் வெயிலின் ஒளியில் தங்க சிலையாக ஜொலித்தது. நான்கு மூலைகளிலும் சுற்றிச் சுற்றி சென்று கண்டு வியந்தேன். மிக உயரமாக கட்டிய கோபுரம். நாம் அதன் அருகில் நின்றால் மிக சிறியவராக தெரிவோம்.








பராமரிப்பு வேலைகள் தவறாமல் செய்வதனால் மட்டுமே தஞ்சையில் அடிக்கும் வெயிலுக்கு கோவிலால் தாக்குப்பிடிக்கமுடிகிறது. கோபுர விமானத்தின் நிழல் கீழே விழாது என்பதைப் பார்க்க தேடித் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. நிழல் கீழே விழும்படிதான் உள்ளது. விக்கிபீடியாவில் கூட மக்கள் கூறுவது போன்று நிழல் கீழே விழாமல் இருப்பதில்லை என கூறுகிறார்கள். நீல வண்ண பின்புறத்தில் தங்க சிலையை வைத்து போன்று இருந்தது. என்ன ஒரு அற்புதமான கட்டிட படைப்பு ! ! !
கோவிலைக் கட்டியவர்களை எண்ணி மனம் மகிழ்ந்தது. இதைச் செவ்வனே கட்டிவைக்க நினைத்த ராஜ ராஜ சோழனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.....

கோவிலின் இடப்புறம் அஜந்தா ஓவியம் போன்று ஒரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே சற்று அகன்ற மேடை போன்று நீளமான திண்ணையில் சிவ லிங்கங்களைப் பதிற்று வைத்துள்ளனர்.




மேற்கூரைகலெலாம் சிதிலம் அடைந்துவிட்டது.






மேலே உள்ள புகைப்படங்கள் எனக்கு மிகப் பிடித்த புகைப்படங்கள். மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த ஓரங்களை உற்று கவனித்துப் பாருங்கள். கூர்மையாக செதுக்கியுள்ளனர். கருவறையின் இடப்பக்கம் நீர் வந்து விழும் இடம் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. எத்தனை படிவங்களாக பிரித்து வடித்துள்ளனர். சற்று உள்ளே தள்ளி, சற்று வெளியே...... வளைவுகளை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளனர். நீளமான தூண்கள்......அலங்காரப் பூக்கள் போன்று உருவங்கள்....தோரணங்கள் போன்று செதுக்கியது......கடவுளின் உருவங்கள்.....வீட்டின் ஜன்னல் போன்று அமைப்பு.........




மேல உள்ள இந்த புகைப்படமும் எனக்கு மிகப் பிடித்தது.


தஞ்சைப் பெரிய கோவிலின் வியப்பு என்னவென்றால் கோபுர விமானத்தின் எடை மட்டுமே ஒரு டன் எடை அளவிற்கு சற்றும் குறைவில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய எடையை அவர்கள் யானையின் துணைக்கொண்டு கோபுரத்தின் மேலே உருட்டிச்சென்றுள்ளனர். ஒரு டன் எடைகிற்கும் மேலாக கோபுரம் மேல் அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வளவு நாட்களும் இந்தக் கனத்தை இந்த கோபுரம் தாங்கிக்கொண்டுள்ளது மிக வியப்பாக உள்ளது..




பொழுது முடிந்து கிளம்பும் முன் தஞ்சைப் பெரிய கோவிலை திரும்பிப் பார்கையில் கம்பீர தோற்றத்துடன் நம்மை வழிஅனுப்பி வைக்கும் அழகே தனி......... 


                                                                                                   (முற்றும்)
********************************************************************************
பதிவு பிடித்திருந்தால் கீழே பின்னூட்டமிடவும். நண்பர்களுடன் பகிரவும்....
புதிய பதிவு பதிவேற்றம் அறிந்து கொள்ள, மேலே மின் அஞ்சல் பதிவு செய்து கொள்ளவும். அல்லது குறுஞ்செய்தியாக நினைவுபடுத்த "குறுஞ்செய்தி நினைவுபடுத்தமை வேண்டும்" என 
sivasdpi@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு கைபேசி எண்ணுடன் ஒரு மின்அஞ்சல் அனுப்பவும்

Comments

  1. நான் அறிந்த வரையில் கோபுத்தின் நிழல் சுற்றுச்சுவரை தாண்டாது. மற்றபடி நிழல் கீழே விழாது என்பது உண்மை இல்லை. அருமையான பதிவிற்கும் புகைப்படங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. ஒ ஹோ ! அப்படியா ... அறிந்து கொண்டேன் திருப்பதி. வருகைக்கும், கருத்திட்டமைக்கும் நன்றி.....

    ReplyDelete
  3. Thanks for giving wonderful informations about Tanjore Temple.Nice Photographs........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4