கிருஷ்ண ஜெயந்தி
சென்ற வருடம் போல இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக சென்றது. கிருஷ்ணர் என்றாலே நினைவிற்கு வருவது வெண்ணை, பானை, ராதா, "ஆயர்பாடி மாளிகையில்" பாடல். இத்துடன் எனக்கு நினைவிற்கு வருவது பால்ய வயதில் பார்த்த கிருஷ்ணர் பற்றிய தொலைக்காட்சி தொடர். தூர்தர்ஷனில் ஒளிபரப்பியது. பிரதி வாரம் ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்புவார்கள். மனம் கிருஷ்ணரிடமே லயித்துவிடும். காரணம் தூர்தர்ஷனைத் தவிர மற்ற "தொலைக்காட்சி கிருஷ்ணர்" போட்டிக்குக் கிடையாது. அமுல் (The Taste Of India) விளம்பரத்தில் கிருஷ்ணர் கார்டூனில் கொளு கொளு கிருஷ்ணர் அழகாக சிரிக்கும் முகம் நினைவிற்கு வரும்.
எனது ஊரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் தான் அந்த கோவிலைக் கட்டினர். நன்கு விசாலமான இடம்.
போன வருடம் கிருஷ்ண ஜெயந்தி அன்று மிதமான கூட்டம் இருந்தது. இந்த முறை நீண்ட வரிசையில் நின்று கிருஷ்ணரை பார்க்க வேண்டியதாகிவிட்டது. "ஏனடா கிருஷ்ணா நீ இவ்வளவு பிரபலம் ஆகிவிட்டாயா?", என மனம் வினவியது.
மெதுவாக மக்கள் கிருஷ்ணனை நெருங்கிய வண்ணம் சென்று கொண்டிருந்தனர். வழியில் உண்டியலை சரிசெய்து கொண்டிருந்தனர். உள்ளே செல்ல செல்ல வெப்பம் அதிகரித்தது. காற்று வெளியேர சிறிய ஜன்னல் மிக உயரத்தில் இரண்டு பக்கமும் வைத்துள்ளனர். கிருஷ்ணர் வேடமணிந்து ஒரே ஒரு குழந்தையைப் பார்க்க நேர்ந்தது.
இங்கு கிருஷ்ணன் ராதையுடன் காட்சி தந்தான். மிக அழகாக அளங்காரம் செய்திருந்தனர். ஐந்தடிக்கு முன்பிருந்தே கைகூப்பி வணங்கிக் கொண்டே சென்றேன். துளசி தீர்த்தம் சிறிது கசக்கியது. கற்பூரம் அதிகமாக கலந்துவிட்டார்கள் போல.
கீழே வலப்பக்கமாக பந்தலிட்டு ப்ரசாதமாக சூடாக கேசரியை ஒரு தொண்ணையில் வைத்து கொடுத்துக் கொண்டிருந்தனர். நெய் மனம் நாசியைத் துளைத்தது. கட கட வென வரிசையில் நின்று வாங்கிக்கொண்டேன். அது ஏனோ தெரியவில்லை. தொண்ணையில் கோவில்களில் கொடுக்கப்படும் ப்ரசாதங்களின் சுவையே தனி. தொண்ணை, காய்ந்த இலைகளினால்(அது எந்த மரத்து இலை என தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்).
தென்னை குட்சிகளைக் கொண்டு பின்னுகின்றனர். அந்த இலை மற்றும் தென்னை குட்சியின் வாடை உணவுப் பொருளுடன் ஒட்டும்போது அது மேலும் சுவையை அதிகப்படுத்துகிறது என நம்புகிறேன். பாக்கு மட்டை அல்லது தைத்த இலைகளில் கூட இந்த வித்யாசத்தை உணரலாம். நெகிழி(plastic), அல்லது சில்வர் தட்டில் சாப்பிடுவதைவிட வாழையிலை, பாக்கு மட்டை அல்லது தைத்த இலைகளில் உணவருந்திப் பாருங்கள். சுவை அருமையாக இருக்கும். யூ டுப் வலைதளத்தில் வாழையிலையில் உணவருந்துவதனால் கிட்டும் நன்மைகளை மிக அழகாக ஐந்து நிமிடம் குறையாமல் ஒரு ஒளிக்காட்சி உள்ளது.
சென்ற வருடம் சுவை மிக நன்றாக இருந்தது. இந்த வருடம்? ம்ம்ம் இல்லையே........ ரவையை அதிகமாக குலைய வைத்துவிட்டார்கள் போல. சென்ற வருடக் கேசரி தொண்டையில் வழுக்கிக் கொண்டு செல்லும். வெட்கமே இல்லாமல் கை கழுவிக் கொண்டு இரண்டு முறை வாங்கி சாப்பிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வரிசையை ஒழுங்குபடுத்த (அனேகமாக அவர்கள் கலைக் கல்லூரி மாணவர்களாக இருக்கலாம்) ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். இவ்வாரான வேலைகளை சுற்றுவட்டாரத்தில் உள்ள கலைக் கல்லுலூரி மாணவர்கள் சிறப்பாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். காரணம், NCC குழுவினர்களாக இருக்கலாம்.
வெளியில் கடைகள் சென்ற வருடம் விட எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அக்காவின் பாப்பாவிற்கு ஒரு முகமுடி மட்டும் வாங்கிக் கொண்டு சர சரவென ஆட்டோவில் எங்களைத் திணித்துக் கொண்டோம். வெயில் மிக அதிகமாக இருந்தது. அக்காவின் வீட்டில் கிருஷ்ணருக்கு படைத்து வணங்கிய புகைப்படங்கள்...........
கட்செவி(Whatsapp) அஞ்சல் மூலம் தோழி தன் மகனின் புகைப்படம் பகிர்ந்து கொண்டது உங்களுக்காக:
வீட்டில் முதல் குழந்தை பிறந்து அது நடக்க ஆரம்பித்தவுடன் வரும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, அந்த குழந்தையின் பிஞ்சு பாதங்களை அரிசி மாவில் முக்கியெடுத்து காலடி தடமிட்டு கிருஷ்ணருக்கு படையலிட்டு(சும்மா கடையில் வாங்கி படைக்கக் கூடாது. வீட்டிலேயே அனைத்து பலகாரங்களையும் செய்து), மீராவின் பஜன்ஸ் பாடல்கள் அல்லது பாம்பே சிஸ்டர்ஸ் ஜெயஸ்ரி பாடல்கள் வீட்டில் ஒலிக்கவிட்டுக் கொண்டு கொண்டாடிப் பாருங்கள். அந்த தருணம் ஒரு மிக சந்தோஷமான தருணமாக அமைந்துவிடும்.
*********************************************************************************
பதிவு பிடித்திருந்தால் கீழே பின்னூட்டமிடவும். நண்பர்களுடன் பகிரவும்....
புதிய பதிவு பதிவேற்றம் அறிந்து கொள்ள, மேலே மின் அஞ்சல் பதிவு செய்து கொள்ளவும். அல்லது குறுஞ்செய்தியாக நினைவுபடுத்த "குறுஞ்செய்தி நினைவு படுத்தமை வேண்டும்" என
sivasdpi@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கைபேசி எண்ணுடன் ஒரு மின் அஞ்சல் அனுப்பவும்.

krishnajayanthi celebrations post really superb...
ReplyDeleteவருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஐஸ்வர்யா....
ReplyDeleteஅருமையான பதிவு. குழந்தை பருவம் நினைவிற்கு வருகிறது.

ReplyDelete