தஞ்சைப் பெரிய கோவில் பகுதி 1

                சமீபத்தில் தஞ்சைப் பெரிய கோவில் காணும் வாய்ப்புக்கிட்டியது. கூகுளார் துணை இருக்கும் போது என்னத்த புதுசா எழுத முடியும்? அது தான் எல்லாத்தகவலும் கொட்டிக்கிடக்குதே! என நானும் உங்களைப் போன்று எண்ணினேன். எனக்குப் பகிர விருப்பமானது தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றும் உணர்வுகளைத் தங்களுடன் பகிர
வேண்டும் என்பதே... அவ்வளவே.....

அது என்னமோ தெரியவில்லை. தஞ்சைப்  பெரியக்கோவிலைக் காணும் வாய்ப்பு எப்போதும் உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் மதிய நேரமாகவே வாய்த்துவிடுகிறது. கோவிலின் நடை, மாலை நான்கு மணிக்குத் தான் திறப்பார்கள் என கூறினார்கள்.  அது வரை என்ன செய்வது? உள்ளே செல்லாமல் உள் சுற்று வட்டாரத்தில் அரசு நடத்தும் தஞ்சாவூர் பொம்மைக் கடையின் வெளியில் அமர்ந்துக் கொண்டோம். ஒட்காருவதர்க்கு ஏதுவாக நல்ல திண்ணைகளை அமைத்திருந்தார்கள்.




விலை சற்று அதிகமாக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு நேர் எதிரில் ஒரு வெளிநாட்டவர் ஒட்கார்ந்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தார். (UNESCO) கோவில்கள் அனைத்திலும் யாராவது ஒரு வெளிநாட்டவரைத் தவறாது பார்த்துவிடலாம். அப்படி இப்படி என மாலை மூன்றரைத் தொட்டது.. இதற்கு மேல் பொறுமை இல்லை என கோவிலின் கதவருகே சென்று உட்கார்ந்து கொண்டோம். இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் ஒரு பர்லாங்கு தூரம் நடந்து போகும்படி அமைத்துள்ளார்கள். அதுவும் கோவிலின் மதில் சுவரை ஒட்டி. தேடிக்கண்டுபுடிக்கும்படி இருக்கிறது. பார்த்த உடன் தெரியும்படி அமைக்கவில்லை. அதே போன்று குடிதண்ணீர் சற்று சிரமப்பட்டு குடிக்கும் படி(பிடிக்கும்படி) தான் அமைத்துள்ளனர்.




கதவருகே கிளிக்கியது..........

                                                                                                                          (.........தொடரும்)
*********************************************************************************
பதிவு பிடித்திருந்தால் கீழே பின்னூட்டமிடவும். நண்பர்களுடன் பகிரவும்....
புதிய பதிவு பதிவேற்றம் அறிந்து கொள்ள, மேலே மின் அஞ்சல் பதிவு செய்து கொள்ளவும். அல்லது குறுஞ்செய்தியாக நினைவுபடுத்த "குறுஞ்செய்தி நினைவுபடுத்தமை வேண்டும்" என 
sivasdpi@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு கைபேசி எண்ணுடன் ஒரு மின்அஞ்சல் அனுப்பவும்.

Comments

  1. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. பாரம்பரிய உடை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  3. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி திருப்பதி....

    ReplyDelete
  4. வேஷ்டி அணிந்து செல்ல வேண்டும் என விரும்பினேன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4