Posts

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 2

Image
பொதுவாகவே கர்நாடகா பேருந்துகள் சற்று விசாலமாக இருக்கும். ஏறுவதற்கான வழி மட்டும் தான் ஒரு வழி பாதை. ஆனால் மூன்று பேர் அமரும் சீட்டு நன்று விசாலமாக இருக்கும். நானும், பத்ரியும் மூன்று பேர் அமரும் சீட்டில் அமர்ந்து கொண்டோம். பெங்களூரில் இருந்து ஷிமொகாவிர்க்கு ஆறரை மணி நேர பயணம். பேருந்து கிளம்பும் போது அவ்வளவாக கூட்டம் இல்லை. இருவரும் அலுவலக அரசியல், புது அலுவலக மாறுதல், பழமை, புதுமை, என பேசிக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தோம். சொல்ல மறந்துவிட்டேன். பெங்களூர் டு ஷிமோகா ஒருவற்கு 135/- ருபாய்.  போகும் வழியில் கூட்டம் நிரம்பிக்கொண்டு வழிந்தது. பயணி ஒருவர் நடத்துனரை திட்டிக்கொண்டு வந்தார். நடத்துனர் அதிகமாக மக்களை ஏற்றிக்கொண்டு இருந்தார். மனுஷன் சும்மா தாளிச்சி எடுத்துட்டார் நடத்துனரை.  அவர் நமது சீட்டு அருகில் தான் பயணித்து வந்தார். பத்ரி அவரிடம் சிறிது பேசிக்கொண்டு வந்தார். பேருந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நல்லவேளை அரசு பேருந்தில் பாடல்களோ, படமோ ஒளிபரப்ப வில்லை. பொதுவாக பேருந்தில் ஒலிக்க விடும் பாடல்கள் கடுப்பை ஏற்படுத்தும். எனக்கு எப்போதும் வெளியில் வேடிக்கை பார்த்துகொண்ட

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 1

Jog Falls (ஜோக் நீர்வீழ்ச்சி). ஆசியாவிலேயே மிக உயரமான நீவீழ்ச்சிகளில் ஒன்றாகும். திரைப்படங்களில் கண்டிப்பாக இந்த நீர்வீழ்ச்சி ஒரு பிரதான காட்சியாக வைப்பார்கள். ஜோக் falls செல்வதற்கு முதலில் தேர்ந்தெடுத்தது  KSRDC Tour Package தான். இந்த பயண தொகுப்பில் அவர்கள் மூன்று இடங்களை கவர் செய்கிறார்கள். 1). ஜோக் falls. 2). சிகன்தூர் சௌடேஸ்வரி கோவில். 3). லிங்கனமக்கி dam. வெள்ளி இரவு சென்று அடுத்த நாள் பெங்களூர் வந்தடைவார்கள். ஒருவர்க்கு ருபாய் 1810/. Bachelor's trip, பட்ஜெட் தாங்காது என்று தனியாக செல்லலாம் என தீர்மானித்தோம். 1810 ரூபாயில் அவர்கள் பயணக்கட்டணம், வாயில் கட்டணம் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். மற்றவை உணவு எல்லாம் நம்முடைய செலவுகள். அவர்கள் எங்கும் தங்குவதில்லை. வெள்ளி இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஷிமோகாவில் காலை கர்நாடகா சுற்றுலா தங்கும் விடுதியில் குளிக்க, புத்துணர்ச்சி செய்துகொண்டு கிளம்ப ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறார்கள்.. சரி நாம் தனியாக செல்வதனால் வெள்ளி இரவு ஷிமோகாவில் தங்கி ஓய்வு எடுத்துகொண்டு சென்றால் தான் நன்று என எண்ணி, நெட்டில் தேடுகையில்