ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 2

பொதுவாகவே கர்நாடகா பேருந்துகள் சற்று விசாலமாக இருக்கும். ஏறுவதற்கான வழி மட்டும் தான் ஒரு வழி பாதை. ஆனால் மூன்று பேர் அமரும் சீட்டு நன்று விசாலமாக இருக்கும். நானும், பத்ரியும் மூன்று பேர் அமரும் சீட்டில் அமர்ந்து கொண்டோம்.

பெங்களூரில் இருந்து ஷிமொகாவிர்க்கு ஆறரை மணி நேர பயணம். பேருந்து கிளம்பும் போது அவ்வளவாக கூட்டம் இல்லை. இருவரும் அலுவலக அரசியல், புது அலுவலக மாறுதல், பழமை, புதுமை, என பேசிக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தோம். சொல்ல மறந்துவிட்டேன். பெங்களூர் டு ஷிமோகா ஒருவற்கு 135/- ருபாய். 

போகும் வழியில் கூட்டம் நிரம்பிக்கொண்டு வழிந்தது. பயணி ஒருவர் நடத்துனரை திட்டிக்கொண்டு வந்தார். நடத்துனர் அதிகமாக மக்களை ஏற்றிக்கொண்டு இருந்தார். மனுஷன் சும்மா தாளிச்சி எடுத்துட்டார் நடத்துனரை.  அவர் நமது சீட்டு அருகில் தான் பயணித்து வந்தார். பத்ரி அவரிடம் சிறிது பேசிக்கொண்டு வந்தார். பேருந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நல்லவேளை அரசு பேருந்தில் பாடல்களோ, படமோ ஒளிபரப்ப வில்லை. பொதுவாக பேருந்தில் ஒலிக்க விடும் பாடல்கள் கடுப்பை ஏற்படுத்தும். எனக்கு எப்போதும் வெளியில் வேடிக்கை பார்த்துகொண்டு மனதிற்கு பிடித்த விஷயங்களை மனதில் அசை போட்டுகொண்டு பேருந்தில் பயணம் செய்வது அலாதி பிரியம். 

மழையும் எங்களது பயணத்தில் சேர்ந்து கொண்டால் இன்னும் நன்றாக இருக்குமே என எண்ணி வானத்தையே பார்த்துகொண்டு பயணித்தேன். வழியில் ஒரு சுமாரான உணவகத்தில் நிறுத்தினார்கள். உணவகம் செல்வதற்கு முன்பே பசி எடுத்து விட்டது. வெள்ளரி பிஞ்சு கொறித்து கொண்டோம். 

உணவகத்தில் நான் சப்பாத்தியும், பத்ரி சித்ரானமும்( கர்நாடகாவில் லெமன் ரைஸ், புலி சாதம், எந்த கலவை சாதம் என்றாலும் சித்ரானம் என்று தான் சொல்வார்கள் என இன்று தான் பத்ரி மூலம் தெரிந்து கொண்டேன்). கடைசியாக ஒரு finishing டச் ஆக ஒரு குளம்பி. (காபி) . வெளியில்  பயனித்தல் உணவருந்திய உடன் ஒரு குளம்பி குடிப்பது வழக்கம்.



பத்ரி கீழே இருப்பவர் 


ஒரு வழியாக இரவு 11.30 மணிக்கு ஷிமோகா பேருந்து நிலையம் சென்று சேர்ந்தோம். இரவில் பதிவு செய்த விடுதியை தேடுதல் சிரமம் என்று கருதி ஆட்டோவில் பயணித்தோம். பதிவு செய்ததற்கான எண்கள் எனது கைபேசியில் எடுத்து வைத்திருந்தேன். வரவேற்பாளரிடம் காண்பித்தவுடன் எனது முகவரியை வாங்கிக்கொண்டு ரூம் சாவியை ஒரு பெரியவரிடம் கொடுத்து அழைத்து போக சொன்னார்.

இப்போது தான் விடுதி புதுப்பித்து கொண்டிருந்தனர். நமக்கு தரை தளம் கொடுத்தனர். விடுதியில் யாரும் இல்லை போல் தெரிந்தது. பத்ரி தான் அங்கு இருப்பார்கள் போல இருக்கிறது என்றார். (பக்கத்துக்கு அறையை காண்பித்து).

அறை சுமார் தான். நான் எண்ணியது போல் ரொம்ப மோசமானதாக இல்லை. என்ன! அப்போது தான் வாசனை திரவியம் தெளிதிருபார்கள் போல. மருந்து வாடை உணர்ந்தேன்.




அறை சுத்தமாக இருந்தது. பத்ரி இவ்வளவு உடல் அலுப்பில்லும்  கண்டிப்பா தொலைக்காட்சி பார்ப்பேன் என அடம் பிடித்தார். கட்டில் எனக்கு வசதியாக இல்லை. ஆகையால் நான் தரையிலே போர்வையை விரித்து படுத்து கொண்டேன். அறையில் பய புள்ளைங்க ஒரே ஒரு flug point வெச்சிருந்தானுங்க. ஒரு flug point இல் ஒரு கைபேசியும், தொலைக்காட்சி connnect செய்த flug point இல் இன்னொரு கைபேசியும் போட்டு விட்டு தூங்க ஆரம்பித்தேன்.  எப்போது கண் அயர்ந்தேன் என்றே தெரியவில்லை............
                                             
                                                                                     ------------------------------தொடரும் ......... 

Comments

  1. தங்கும் விடுதி பற்றிய தகவல் பதிவு செய்தால் வாசகர்களுக்கு பயன்படும்.

    ReplyDelete
  2. திருப்பதி,
    தங்குவதற்கான விடுதி வசதி செய்து கொள்ள எனது முதல் பகுதியில் "StayZilla" இணையதளத்தை அறிமுகப்படுத்தயுள்ளேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4