ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 1

Jog Falls (ஜோக் நீர்வீழ்ச்சி). ஆசியாவிலேயே மிக உயரமான நீவீழ்ச்சிகளில் ஒன்றாகும். திரைப்படங்களில் கண்டிப்பாக இந்த நீர்வீழ்ச்சி ஒரு பிரதான காட்சியாக வைப்பார்கள்.


ஜோக் falls செல்வதற்கு முதலில் தேர்ந்தெடுத்தது  KSRDC Tour Package தான். இந்த பயண தொகுப்பில் அவர்கள் மூன்று இடங்களை கவர் செய்கிறார்கள்.

1). ஜோக் falls.
2). சிகன்தூர் சௌடேஸ்வரி கோவில்.
3). லிங்கனமக்கி dam.

வெள்ளி இரவு சென்று அடுத்த நாள் பெங்களூர் வந்தடைவார்கள். ஒருவர்க்கு ருபாய் 1810/. Bachelor's trip, பட்ஜெட் தாங்காது என்று தனியாக செல்லலாம் என தீர்மானித்தோம். 1810 ரூபாயில் அவர்கள் பயணக்கட்டணம், வாயில் கட்டணம் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். மற்றவை உணவு எல்லாம் நம்முடைய செலவுகள். அவர்கள் எங்கும் தங்குவதில்லை. வெள்ளி இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஷிமோகாவில் காலை கர்நாடகா சுற்றுலா தங்கும் விடுதியில் குளிக்க, புத்துணர்ச்சி செய்துகொண்டு கிளம்ப ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறார்கள்..

சரி நாம் தனியாக செல்வதனால் வெள்ளி இரவு ஷிமோகாவில் தங்கி ஓய்வு எடுத்துகொண்டு சென்றால் தான் நன்று என எண்ணி, நெட்டில் தேடுகையில் வரப்ரசாதமாக கிட்டியது Stayzilla இணையத்தளம்.  அவர்கள் தலத்தில் திறந்த உடனே தட்டச்சு தொடர்பு வருகிறது. அவர்களுடன் நாம் ஷிமோகாவில் தங்குவதற்கு ஏற்ற விடுதி, இத்தனைபேர் வருகிறோம் இந்த பட்ஜெட்டில் வேண்டும் என்று சொல்லியவுடன் அவர்கள் ஒரு விடுதியின் தங்கும்  விலை, ரூம்களின் வசதிகள் அனைத்தும் சொல்லிவிடுகிறார்கள். நம் பட்ஜெட்டிற்கு ஏற்றவை என தீர்மானித்தவுடன் எப்படி பதிவு செய்வது என அவர்களிடமே கேட்டால் பணம் செலுத்துவதற்கான லிங்க் குடுக்கிறார்கள். அந்த தலத்தில் சென்று இணைய வங்கி மூலம் கட்டணம் செலுத்தினால் நமக்கு உறுதி செய்த ஈமெயில் வந்துவிடுகிறது.

நான், மற்றும் என்னுடன் பணியாற்றும் பத்ரி மட்டுமே செல்வதனால் டபுள் பெட் ரூம் தேர்ந்தெடுத்து கொண்டோம். 24 மணி நேரம் கட்டணம் 450 ருபாய் மட்டுமே. இரண்டு பேருக்கும் சேர்த்து. இணைய பதிவு  என்பதனால் தள்ளுபடி குடுத்தார்கள்.

ஜோக் நீர்வீழ்ச்சி  செல்வது என்றால் நல்ல மழை காலத்தில் சென்றால் தான் அருவியின் அழகை ரசிக்க முடியும். ஆகையால் இந்த ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுத்தோம். அக்டோபர் மாதம் வரை சீசன் உள்ளது. நமக்கு இந்த மாதம் வசதியாக இருந்ததனால் இந்த மாதம் தேர்ந்தேடுத்தோம்.


வெள்ளி மதியம் கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்ப ஆயத்தம்  ஆனோம். கர்நாடகாவில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளது. ஒன்று கெம்பே கௌடா பேருந்து நிலையம், மற்றொன்று satellite பேருந்து நிலையம். இரண்டில் எது ஷிமோகா செல்லும் பேருந்து நிறுத்தகம் உள்ளது என தெரியவில்லை. பத்ரி நாம் சீக்கிரம் பேருந்து நிலையம் செல்வதகான யோசனைகளை தெரிவித்தார். நான் தேர்ந்தெடுத்தது கெம்பே கௌடா பேருந்து நிலையம்.

அங்கு சென்று விசாரணை நிலையத்தில் விசாரித்தால் கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்தே செல்லலாம் என தெரிந்தது. (இந்த பதிலை அந்த விசாரணை நிலையத்தில் கேட்டதற்கு அந்த அதிகாரி வல் என குறைத்தார். காரணம் அவர் சற்று வயதானவர். சுத்தமான கனடா தாய் மொழியாளர் (கர்நாடகா). அவர் முதல் முறை கூறியது சரியாக புரியவில்லை ஆகையால் மூன்று முறை மறுபடியும் கேட்க வேண்டியதாயிற்று. மனிதன் tension ஆகிவிட்டார். காலையில் சென்றால் பெண்கள்(ஐம்பது வயதை கடந்த பெண்கள் தான்பா :)) இருப்பார்கள். நமக்கு தகவலை புரியும் விதமாக நன்றாக கூறுவார்கள்.

............................................................(தொடரும்)....................

பதிவு பிடித்திருந்தால் கீழே கமெண்ட் போடவும். நண்பர்களுடன் பகிரவும்....
புதிய பதிவு பதிவேற்றம் அறிந்து கொள்ள மேலே ஈமெயில் பதிவு செய்து கொள்ளவும். அல்லது இந்த தளத்தை bookmark செய்து கொள்ளவும். 

Comments

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று