Posts

Showing posts from February, 2016

திரு திரு திரு பாகம் நான்கு

                     அன்னதானம் வழங்கும் இடம் லட்டு வாங்கும் இடத்திலிருந்து வலப்பக்கமாக ஒரு நூறு அடி தொலைவில் உள்ளது. உணவு அருந்துவதற்கு மிக சிறப்பாக பெரிய மஹால் போன்று கட்டியுள்ளனர். தைஇலையில் சுட சுட சாதம், சாம்பார்,  பொரியல், கூட்டு, ஒரு இனிப்புடன் ரசம், மோர் என பாத்திகட்டி அடிக்க சிறப்பாக பரிமாறுகின்றனர். இரண்டாம் முறையும் சாதம் பரிமாறுகின்றனர். கூச்சமேபடாமல் வாங்கிக்கொள்ளலாம்.                     சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தால் மிக உயரமான சுவரில் அழகிய ஓவியம் தீட்டியுள்ளனர். நாங்கள் கைபேசியை பெட்டகத்திலிருந்து எடுத்துவராததால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. அங்கிருந்து நேராக லட்டு வாங்க சென்றோம். வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது நம் காதோரமாக கூடுதல் லட்டு வேண்டுமா? கூடுதல் லட்டு வேண்டுமா? என ஒரு சிறுவன் வேகமாக நடந்துகொண்டே கேட்டுக்கொண்டு செல்கிறான். ஒரு சீட்டிற்கு ஐந்து லட்டு வாங்கிக்கொண்டு கைபேசி வாங்கும் இடத்திற்க்கு சென்று கைபேசி எடுத்துக்கொண்டு மலையிலிருந்து கீழிறங்கும் பேருந்தில் சென்று அமர்ந்தோம்.                  நேரம் இருந்த காரணத்தால் காலஹஸ்தி செல்ல தீர்மானி

திரு திரு திரு பாகம் மூன்று

Image
                         காலை ஐந்து மணி அளவில் குளித்துவிட்டு, குளம்பி பருகிவிட்டு ஸ்ரீ வாரி மெட்டு செல்லும் பேருந்தில் பயணமானோம். இருபது அல்லது முப்பது நிமிட பயணம் தான். தேவஸ்தான இலவச பேருந்து வசதியும் உள்ளது. போகும் வழியிலேயே ஐந்து மணிநேர நடைபயண இடத்தில் சில பேர் இறங்கிக்கொண்டனர். அந்த வழி அதிகமான படிகட்டுகள் இல்லாமல் இருப்பதனால் அந்த வழியை சிலர் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.                          பேருந்தை விட்டு இறங்கியவுடன் அந்த இடம் நன்றாக இருந்தது. மலை வழி என்பதனால் சில்லென காலநிலை இருந்தது. குளிர்ந்த காலநிலை மனதிற்கு இதமளித்தது. சீக்கிரமாக தரிசித்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லவேண்டும் என்பதனால் சட சடவென நடக்க ஆரம்பித்தோம்.                                                                      கம்பி வேலியினுள்ளே பூங்கா போன்று அமைத்து ஒரு பெரிய சிவன் சிலையை நிருவியுள்ளனர்.   முதல் படி ஆரம்பிப்பதற்கு கடவுளை வணங்கிவிட்டு செல்ல பூஜை செய்கின்றனர். மொத்தம் 2400 படிகள். எண்ணிக்கையில் மலைப்பாக இருந்தது. ஆனால் உடன் பேசிக்கொண்டு செல்ல நண்பர்கள் அல்லது குடும்

திரு திரு திரு பாகம் இரண்டு

           நாங்கள் பேசிக்கொண்டு வந்த jargan(அலுவலகத்திர்க்கு உள்ளே பயன்படுத்தப்படும் வார்த்தைகள்) தோரணையைக் கொண்டு அந்தப் பெண் நாங்களும் அவருடைய அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என மிக நீண்ட நேரம் கவனித்து வந்திருக்கின்றார். அந்த பெண்ணின் ஊர் பலமனேர். ஆந்திரா வட்டாரம். நீண்ட நேரம் பேசிக்கொண்டு வந்தோம். வழியில் ஒரு சிற்றுண்டியில் பேருந்து நின்றது. இயற்கை அழைப்பை முடித்துக்கொண்டு ஒரு தேநீர் கோப்பையுடன் பேருந்து பயணம் தொடர்ந்தது. வழியிலேயே அந்த பெண் இறங்கிவிட்டார். பேரைக் கேட்காமல் விட்டோமே என பின்னர் உரைத்தது.                                சித்தூர் வந்தடைந்தோம். பத்ரி தெலுங்கு தாய் மொழிக் கொண்டவர் என்பதால் எனக்கு சிரமமில்லாமல் இருந்தது. பேருந்து நிலையத்திலேயே உணவருந்திவிட்டு திருப்பதி செல்லும் பேருந்தில் அமர்ந்தோம். ஒரு மணி முப்பது நிமிடங்களில் திருப்பதியைச் சென்றடைந்தோம். இரவு பத்து மணி. தரிசனத்தை சீக்கிரம் முடிப்பதற்கு எளிய வழி மலையின் கீழிருந்து நடந்து சென்றால் அவர்களுக்கு சிறப்பு சலுகையில் (எந்த கட்டணமும் இல்லாமல்) மூன்று மணி நேரத்தில் தரிசித்து வரலாம் என பத்ரி கூறினார்.  அவ்வாறு கீ

திரு திரு திரு பாகம் ஒன்று

                                                       சென்ற வாரம் எனக்கும், பத்ரிக்கும் ஒன்றாக வார விடுமுறை கிடைத்தது. திடீரென திருப்பதி சென்று வரலாம் என எண்ணம் எனக்கு. பத்ரிக்கு சிறிது தயக்கம் வருவதற்கு. ஏனென்றால் அவர் சென்ற வருடம் தான் திருப்பதி சென்று வந்திருந்தார். இருந்தாலும் நான் கூப்பிட்ட காரணத்தினாலே என்னுடன் வர சம்மதித்தார். கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு[ப் பிறகு திருப்தி செல்ல ஆயத்தமானேன். சென்ற முறை திருப்பதிக்கு சென்றும் தரிசனம் செய்யவில்லை. சில காரணங்களால். பெங்களூரில்(பெண்கலூரில்) இருந்து திருப்பதி செல்ல,  முதலில் ஹோசூர் சென்று வேலூர் வழியாக சித்தூர் தொட்டு திருப்பதி செல்வதாக நான் திட்டமிட்டிருந்தேன்.                    ஆனால் பத்ரி அது பயண நேரத்தை அதிகரிக்கும் என கூறினார். கூகுலாரும் அவ்வாறே கூறினார். முன்பே திட்டமிட்டிருந்தால் தொடரூர்தி மூலம் முன்பதிவு செய்திருக்கலாம்.  பத்ரி வேறொரு வழியைப் பின்பற்றக் கூறினார். பெங்களூரில் இருந்து கிருஷ்ணராஜபுறம் சென்று கோலார் (தங்க வயல் தாலுக்) வழியாக சித்தூர் தொட்டு திருப்பதி செல்வது இரண்டாவது பாதை.  இந்த வழியே ச