திரு திரு திரு பாகம் ஒன்று

                               
                       சென்ற வாரம் எனக்கும், பத்ரிக்கும் ஒன்றாக வார விடுமுறை கிடைத்தது. திடீரென திருப்பதி சென்று வரலாம் என எண்ணம் எனக்கு. பத்ரிக்கு சிறிது தயக்கம் வருவதற்கு. ஏனென்றால் அவர் சென்ற வருடம் தான் திருப்பதி சென்று வந்திருந்தார். இருந்தாலும் நான் கூப்பிட்ட காரணத்தினாலே என்னுடன் வர சம்மதித்தார். கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு[ப் பிறகு திருப்தி செல்ல ஆயத்தமானேன். சென்ற முறை திருப்பதிக்கு சென்றும் தரிசனம் செய்யவில்லை. சில காரணங்களால்.
பெங்களூரில்(பெண்கலூரில்) இருந்து திருப்பதி செல்ல,  முதலில் ஹோசூர் சென்று வேலூர் வழியாக சித்தூர் தொட்டு திருப்பதி செல்வதாக நான் திட்டமிட்டிருந்தேன்.

                   ஆனால் பத்ரி அது பயண நேரத்தை அதிகரிக்கும் என கூறினார். கூகுலாரும் அவ்வாறே கூறினார். முன்பே திட்டமிட்டிருந்தால் தொடரூர்தி மூலம் முன்பதிவு செய்திருக்கலாம்.  பத்ரி வேறொரு வழியைப் பின்பற்றக் கூறினார். பெங்களூரில் இருந்து கிருஷ்ணராஜபுறம் சென்று கோலார் (தங்க வயல் தாலுக்) வழியாக சித்தூர் தொட்டு திருப்பதி செல்வது இரண்டாவது பாதை.  இந்த வழியே சிறந்ததாக தோன்றியது. காரணம் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் திருப்பதியைச் சென்று அடைந்து விடலாம்.

வெள்ளிக்கிழமை மதியம் மூன்று மணி அளவில் பயணம் ஆரம்பமானது. க்ரிஷ்ணரஜபுரத்தில் இருந்து சித்தூர் சென்று அங்கிருந்து திருப்பதிக்கு பேருந்து மாறிக்கொள்ளலாம் என ஏறிக்கொண்டோம். கர்நாடக பேருந்து அது. எப்போதுமே கர்நாடக பேருந்தில் செல்வது என்றால் பிடிக்கும். காரணம் நன்கு விசாலமான இருக்கைகள். மூன்று பேர் அமரும் இருக்கை நன்கு வசதியாக இருக்கும். பேருந்து கட்டணம் சற்று அதிகம். ஒரு நபருக்கு நூற்றி இருபது ரூபாய். ஆனால் சிறப்பான பயணம். அலுவலக விடயங்கள் பேசிக்கொண்டு பயணித்தோம். சென்ற முறை திருப்பதி சென்ற நினைவுகள் மனதில் அசை போட்டுக்கொண்டு நான் பயணித்தேன். எங்களது பின் இருக்கையில் ஒருவர் எங்களைக் கவனித்து வருகிறார் என்பதை நாங்கள் கவனிக்கவில்லை.....அவர் ........


******************************************************(தொடரும்)**************


Comments

  1. அவர்... என்று முடித்து எங்கள் ஆர்வத்தை தூண்டும் உக்தி அருமை.

    ReplyDelete
  2. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி திருப்பதி.....

    ReplyDelete
  3. வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி ஐசு..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று