ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஒன்று



              இந்த முறை பயணிக்க தேர்ந்தெடுத்த இடம் ஹம்பி. காரணம் சிறுவயதிலிருந்தே இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். இந்த ஹம்பி ஊரின் சிற்பங்கள் அனைத்தையும் ஓர் தமிழ் பாடலில் காட்டிவிடுகிறார்கள். எந்த பாடல் என கண்டுபிடித்து பின்னூட்டத்தில் கூறுங்கள். அது எந்த பாடல் என இந்த பயணத்தின் கடைசி பதிவில் கூறுகிறேன்.

       வழக்கம் போல இந்தமுறையும் பயணத்திற்கு துணையாய் வந்தவர் பத்ரி. அவருடன் அவருடைய அறை நண்பர் காசியும் சேர்ந்துகொண்டார். பெங்களூரில் இருந்து கிட்டத்தட்ட 400 KM தொலைவில் உள்ளது இந்த ஹம்பி. UNESCO World Heritageஆல் பரிந்துரைக்கப்பட்ட இடம். கூகிள் தேடுபொறியில் கர்நாடகா மாநிலத்தில் அதிகமாக தேடப்பட்ட இடம் என இந்த ஹம்பி தக்கவைத்துக்கொள்கிறது. பேருந்து பயணம் இவ்வளவு தூரம் ஒத்துவராது என எண்ணி தொடர்வண்டி பதிவு செய்தோம். தூங்கும் வசதி கொண்டது. வெள்ளி இரவு பெங்களூரில் இருந்து ஹோசபெட் வரை. பயணத்திற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு தொடர்வண்டி பதிவு செய்திருந்தோம். நீங்கள் பயணம் மேற்கொள்ள இன்னும் சற்று முன்பாகவே பதிவு செய்துகொள்ளுங்கள். 

                  ஹோசபெட்டில் தங்குவதற்கு வழக்கம் போல நம்ப இணையதள நண்பன் Stayzilla (www.stayzilla.com) மூலம் பதிவு செய்திருந்தோம். மூன்று நபருக்கு நானூற்றி தொண்ணூறு ருபாய். பயணத்தில் தங்குவதற்கு இந்த இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்வது எளிமையாகவும், வசதியாகவும் உள்ளது. வெள்ளி இரவு பெங்களூர் தொடர்வண்டி நிலையம் சென்றடைந்தோம். நாம் பயணத்திற்கு கீழ் தளமே பதிவு செய்திருந்தாலும் ஆண்கள் பயணம் செய்தால் அந்த கீழ் தளம் நமக்கு அரிதாகவே கிட்டும். இரண்டு மூத்த குடிமக்கள் வந்து அமர்ந்து கொண்டனர். கொண்டு வந்த சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அவர்கள் பாட்டிற்கு படுத்துக்கொண்டனர். நானும் பத்ரியும் மேல் தளத்திர்க்கு ஏறி படுத்துக்கொண்டோம். (வேற வழி!!!????)காசி பக்கத்து அறையில்.

******************************************************(தொடரும்)************

                                --------உங்களது பின்னூட்டத்தை எதிர்பார்க்கும் திசைதென்றல்...

Comments

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4

தஞ்சைப் பெரிய கோவில் பகுதி 1