ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 5
மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. ஜோக் நீர்வீழ்ச்சி கீழே இறங்கி செல்வதற்கு படிகள் உள்ளன. ஆயிரம் படிகள் தாண்டி சென்றால் கீழே சில்லிடும் சாரல்களை மேலே படவிட்டு ரசிக்கலாம். நம் நேரம் இறங்கி போவதற்கான வழியை அடைத்து வைத்து விட்டார்கள். மேலேயே உட்காருவதற்கு மரப்பலகைகள் போட்டுள்ளனர்..... எவ்வளவு படங்கள் எடுத்தாலும் மனம் ஜோக் அருவியையே சுற்றி சுற்றி வந்தது..அருவியை சுற்றி நடைபாதை போன்று சலவை கற்களால் சமமாய் அமைத்துள்ளனர். தொங்கு பாலம் போன்று ஒரு மாதிரி ....... உடைந்த மரக்கிளையில் இரு நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாமும் அப்படியே.............. மணி இரண்டை தொட்டது. பசி வயிற்றை கிள்ளியது. சிகன்தூர் சௌடேஸ்வரி கோவிலுக்கு செல்லலாம் என பத்ரி கூறினார். மழை வேறு பெய்து கொண்டே இருந்தது. நேரம் அதிகமாகும் காரணத்தினால் மறுத்து விட்டேன். மறுபடியும் மழை வெளுத்து வாங்க ஆரம்பித்தது. அங்கே உணவகங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு காம்ப்ளெக்ஸ் போன்று ஒரு இடத்...