ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 3

காலை ஆறு மணிக்கு பத்ரியை அலாரம் வைக்க சொல்லியிருந்தேன். என்னை எழுப்பி விட்டுட்டு அவர் தூங்கிக்கொண்டிருந்தார். குளியலறையில் சுடு தண்ணீர் வரவில்லை. நல்ல குளிர். பாவிகளா ஏமாற்றி விட்டார்களே என எண்ணி கீழே போய் வரவேற்பாளரிடம் கேட்டேன். அவர் ஆறுமணிக்கே "நாங்கள் சுடுதண்ணீர் போட்டு விட்டோம்", என்றார்... சரி பத்ரியை முதலில் குளிக்க அனுப்பி விட்டு பிறகு சிறிது நேரம் கழித்து நாம் குளிப்போம், அப்போது சுடு தண்ணீர் வரும் என எண்ணினேன்.

நம்பிக்கை வீண் போக வில்லை. பிறகு குளித்து விட்டு, செக் அவுட் செய்தோம். வரவேற்பாளரிடம் விசாரித்தோம். சிகன்தூர் சௌடேஸ்வரி கோவில் மற்றும் ஜோக் நீர்வீழ்ச்சி  ஒரே நாளில் பார்க்க முடிமா என்று. அவர் பார்க்க முடியும் என்றார். இருந்தாலும் மனதில் ஒரு குழப்பம். காரணம். பயண தூரங்கள் தான். சிகன்தூர் சௌடேஸ்வரி கோவில் செல்வது என்றால் நமக்கு நேரம் குறைவு. காரணம், அந்த கோவிலுக்கு செல்வது என்றால் சாலை பயணம் செய்து, பிறகு ஒரு பெரிய ஆற்றை கடந்து போக வேண்டும். ஆற்றை கடக்க ஒரு படகு பயணம் செய்ய வேண்டும். இந்த இரண்டு பயணங்களை முடித்து அதற்குப்பின் ஜோக் செல்வது என்றால் கால தாமதம் ஏற்படும். இது அனைத்தும் நினைத்து தான், நான் பத்ரிவிடம் KSRTC Tour Package எடுத்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தேன்.

தங்கி இருந்த விடுதி வெளித்தோற்றம்:





பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு உணவு விடுதியில் உணவருந்தினோம். தோசை, பூரி, இட்லி மொத்தமாக நூறு ரூபாய்க்குள் தான் ஆனது. ஷிமோகா பேருந்து நிலையத்தில் சென்று விசாரித்து அரசு பேருந்து நடத்துனரிடம் விசாரித்தால் அவர் தனியார் பேருந்தில் செல்லுங்கள் என அறிவுறுத்தினார். (Commmission) வாங்கிருப்பார் என நானும், பத்ரியும் எண்ணினோம். ஆனால் அவர் நல்லது தான் செய்துள்ளார் என எங்களுக்கு உரைத்தது போகும் வழியில் தான் தெரிந்தது. 

வழியில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் விழிப்புணர்வு பேரணிகள் நடத்திக்கொண்டிருந்தார்கள்......பேருந்தில் இருந்து கொண்டே கிளிக்கியது.......






வழில் எங்கும் பச்சை பசேல் என புல்வெளிகள், வயல்கள், நீர் நிலைகள், பண்ணைகள், ஆற்று படுகைகள், பாலங்கள்... 

நேற்று மழை பெய்து இன்று எங்களின் பயணத்தை இனிதாக ஆக்க மழை எண்ணியது போன்று தோன்றியது...... எப்போதும் ஜன்னலோர பயணம் எனக்குப்பிடித்தது. முகத்தில் அரையும் குளிர் காற்று வீசினாலும், ஜன்னலை மூட மனமில்லை.... நாங்கள் பயணம் செய்வது கர்நாடகாவா ? இல்லை கேரளாவா என மனம் குழம்பியது... காரணம் நாங்கள் வெளியில் பார்த்த அற்புதமான இயற்கை காட்சிகள்....

எங்கு பார்த்தாலும் பச்சை நிறங்கள்.... துளிர்த்து விட்ட பச்சை இலைகள்............ பாசி போர்த்திய வீட்டு கூரைகள்,,,,,,,,, சிறிது தூரம் காட்டிற்குள் செல்வது போன்ற பயணம், உடனே ஒரு சிறிய கிராமம், சிறிது தூரத்தில் ஒரு பெரிய நீர் நிலை,  வயல் ஒட்டி ஓடும் நீர் காவாய்,....... 












வயல்கள் முழுவதும்  நெர்கலஞ்சியங்கள். கண்ணிற்கு எட்டிய தூரம் வரை வயல் வரப்புகள்..... ஆட்கள் வேலை செய்வது போன்று அதிகமாக காணக் கிடைக்கவில்லை.  கரும்பு தோட்டங்கள் சிறிது காணக்கிடைத்தது.  அண்ணாச்சி பழங்கள் வழியில் விற்று கொண்டிருந்தார்கள். ஆசையாக இருந்தது வாங்கி சாப்பிட. நேற்று பெங்களூரில் இருந்து செல்லும் வழியில் தும்கூர் என்ற இடத்தில் வெள்ளரி பிஞ்சு சாபிட்டதன் விளைவு தொண்டை வலி.. சளி பிடிப்பதற்கான ஆரம்பம் தெரிந்தது..... சோகமாக அண்ணாச்சியை தவிர்த்து விட்டேன்.


-------------------------------------------------(தொடரும் .........................)

Comments

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று