ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 5

மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. ஜோக் நீர்வீழ்ச்சி கீழே இறங்கி செல்வதற்கு படிகள் உள்ளன. ஆயிரம் படிகள் தாண்டி சென்றால் கீழே சில்லிடும் சாரல்களை மேலே படவிட்டு ரசிக்கலாம். நம் நேரம் இறங்கி போவதற்கான வழியை அடைத்து வைத்து விட்டார்கள்.

மேலேயே உட்காருவதற்கு மரப்பலகைகள் போட்டுள்ளனர்.....









எவ்வளவு படங்கள் எடுத்தாலும் மனம் ஜோக் அருவியையே சுற்றி சுற்றி வந்தது..அருவியை சுற்றி நடைபாதை போன்று சலவை கற்களால் சமமாய் அமைத்துள்ளனர். தொங்கு பாலம் போன்று ஒரு மாதிரி .......
























உடைந்த மரக்கிளையில் இரு நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாமும் அப்படியே..............






மணி இரண்டை தொட்டது. பசி வயிற்றை கிள்ளியது. சிகன்தூர் சௌடேஸ்வரி கோவிலுக்கு செல்லலாம் என பத்ரி கூறினார். மழை வேறு பெய்து கொண்டே இருந்தது. நேரம் அதிகமாகும்  காரணத்தினால் மறுத்து விட்டேன்.  
மறுபடியும் மழை வெளுத்து வாங்க ஆரம்பித்தது. அங்கே உணவகங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு காம்ப்ளெக்ஸ் போன்று ஒரு இடத்தில் வைத்துள்ளனர். உள்ளே சென்றால் சாப்பிட தோசை, பிரட் ஆம்லேட், சித்தரான மட்டும் தான். மீதி அனைத்தும் கொரிப்பதர்க்கான சிப்ஸ், புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட பழ சாறுகள்....





ஆளிர்க்கு ஒரு ஆம்லேட் சாப்பிட்டு விட்டு நடையை கட்டினோம். அங்கு சாப்பிட உணவகங்கள் இல்லாததனால் இந்த காம்ப்ளெக்ஸ்இல் அவர்கள் வைத்த விலை தான்.  இரண்டு பிரட் ஆம்லேட் விலை எண்பது ருபாய். 

ஜன்னலோர இருக்கையில் குளிருக்கு இதமாக போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு, சுகமான ஜோக் அருவியின் காட்சியை மனதில் ஓடவிட்டுக்கொண்டு நள்ளிரவு மூன்று மணி அளவில் பெங்களூர் வந்து சேர்ந்தோம்.....................


               ****************(இத்துடன் ஜோக் அருவி பயணக்கட்டுரை முடிவுற்றது)

******************************************************************************
பதிவு பிடித்திருந்தால் கீழே கமெண்ட் போடவும். குறைகளை சுட்டிக்காட்டவும். google translate உபயோகபடுத்துவதால் எழுத்து பிழைகள் உள்ளன. அடுத்த பதிவுகளில் பிழையை திருத்திக் கொள்கிறேன். 
பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....
புதிய பதிவு பதிவேற்றம் அறிந்து கொள்ள மேலே ஈமெயில் பதிவு செய்து கொள்ளவும். அல்லது இந்த தளத்தை bookmark செய்து கொள்ளவும். 

Comments

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று