Posts

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஐந்து

Image
                                   பாதாள கோவில் அடுத்து சென்றது தாமரை மஹால். இந்த கட்டிடத்தின் வடிவம் தாமரை பூ போன்ற அமைப்பைப் பெற்றது. இந்த மஹால் என்பது இளவரசி குளிப்பதற்காக கட்டிய அரண்மனையாகும். உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை.                                              பச்சை புல்வெளியில் மிக நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடடம் சுண்ணாம்பு கலவைக்கொண்டு கட்டப்பட்டது. எப்போதும் போல கட்டிடத்தின் சுவற்றில் காதல் கிறுக்கல்கள். தாமரை இலை போன்று அமைக்கப்பட்டு தண்ணீர் அதனைச்சுற்றி இருக்கும்படி வடிவமைத்துள்ளனர்.     யானை மண்டபம்:                                  ராணி மண்டபத்திர்க்கு அருகிலேயே யானைகள் இளைப்பார ஒரு மண்டபம் அமைத்துள்ளனர். மிக நீளமான மண்டபம். ஒவ்வொரு கூடமும் ஒரு யானை தங்கும் அளவு அமைத்துள்ளனர்.    பள்ளி மாணவர்களுக்கு வரலாற்று சுற்றுலா கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். சில வெளிநாட்டவர்கள் அங்கொன்று இங்கொன்றுமாக இருந்தனர்.        அதன் பிறகு சென்றது ஒரு கோவில். சிலைகள் அனைத்தும் புராண கதைகள் சொல்கிறது. புகைப்படம் எடுத்துக்கொ

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி நான்கு

Image
                            விருபாகஷா கோவிலிற்கு அருகில் ஒரு இரண்டு அல்லது நான்கு km தொலைவில் "கடாலே களு கணேசா" மண்டபம் போன்று ஒரு இடத்திருக்கு சென்றோம். வெயில் மிக அதிகமாக இருந்ததனால் சுற்றுலா பயணிகள் குறைவானவர்களாகவே இருந்தார்கள்.                   அங்கிருந்து அடுத்து சென்றது "லக்ஷ்மி நரசிம்ஹா விக்ரஹா". இந்த சிலை கர்நாடக மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் இந்த சிலையின் ஓவியத்தைப் பார்க்கலாம். இந்த சிலையின் வரலாறு விக்கிபீடியாவில் தெரிந்துகொள்ளலாம்.     இதற்கு அருகிலேயே நீரில் எப்போதும் சூழ்ந்துள்ள சிவலிங்கம் ஒன்று உள்ளது.  அதற்கு அடுத்தது சென்றது பாதாள கோவில். பராமரிப்பு என்பது UNESCO மூலம் நடக்கிறது. அவ்வளவே. மற்றபடி பூஜை என்பதெல்லாம் கிடையாது. ***********************************************(தொடரும்)*************** (தங்களின் பின்னூட்டத்தை எதிர்பார்க்கும் திசைதென்றல்)

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று

Image
                                              பனிரெண்டு நபர்கள் அமரும் வண்டி.. ஏழு நபர்கள் மட்டுமே பயணித்தோம். அதுவே எங்களுக்கு வசதியாக இருந்தது. எங்களுடன் அந்த சுற்றுலா மைய அதிகாரியும் இணைந்து கொண்டார்.                             போகும் வழியில் இன்னொரு சுற்றுலா வழிகாட்டி ஏறிக்கொண்டார். சுற்றுலா மைய அதிகாரி போகும் வழியில் இறங்கிக்கொண்டார். சுற்றுலா வழிகாட்டி தமிழ் மற்றும் கன்னடா மொழி பேசிக்கொண்டு வந்தார். அவர் பேசும் தமிழ் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. முதலில் பார்க்கச் சென்றது விருபாக்சா கோவில்.                        பழமையான கோவில். பார்க்கும்போது தெரிந்தது. சிறிது சிதிலம் அடைந்திருந்தது. வெளியே புகைப்படக் கருவிக்கு கட்டணம் உண்டு. வழிகாட்டி கோவிலின் சிறப்பை விவரித்துக்கொண்டே வந்தார்.          வெளிநாட்டவர் இருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். World Heritage Temples என முதலில் வரும் வரிசைப்படி ஹம்பி வந்துவிடுகிறார்கள் போல. நான்கு, ஐந்து பேர் காண முடிந்தது. நல்ல வெயில்.            கோவிலின் உட்ப்ரகாரத்தில் ஓர் இடத்தில் எங்களை நிறுத்தினார் வழி

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி இரண்டு

Image
                      தொடர்வண்டி நிலையத்தில் இருந்து சற்று அருகிலேயே அறை வேண்டும் என கூறியதால் இரண்டு km உள்ளேயே அரை இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன். ஹம்பி பார்க்க முடிவு செய்தவுடன் நாங்கள் கர்நாடகா மாநில சுற்றுலா தளத்தைத் தொடர்புகொண்டு ஒரு நாள் சுற்றுலா வேண்டும் என தீர்மானித்துக் கொண்டோம். (விடுமுறை கருத்தில் கொண்டு). www.karnatakaholidays.net என்ற இணைய தளத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் மட்டும் வேண்டும் என்றால் அதற்கேற்றார் போல் சுற்றுலா தொகுப்பு உள்ளது. நம் வசதிக்கு ஏற்ப சுற்றலா தொகுப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கர்நாடகா சுற்றுலா மையத்தை நேரிடையாக தொடர்பு கொண்டதால் அவர்கள் எந்த விதமான முன்பணமும் வாங்கவில்லை. சுற்றுலா தினத்தன்று கட்டணம் செலுத்தினால் போதுமானது. அவர்களிடம் ஒரே விதி, பயணிகள் குறைந்த பட்சம் பனிரெண்டாவது சேர்ந்தால் தான் பேருந்து இயக்குவார்கள் என இணையதளத்தில் கூறியிருந்தனர். ஆனால் நடந்தது வேறு.                     அறை நன்கு வசதியாக இருந்தது. மூவரும் சுற்றுலா மையத்திற்கு  செல்ல தயாரானோம்.                                                       

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஒன்று

              இந்த முறை பயணிக்க தேர்ந்தெடுத்த இடம் ஹம்பி. காரணம் சிறுவயதிலிருந்தே இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். இந்த ஹம்பி ஊரின் சிற்பங்கள் அனைத்தையும் ஓர் தமிழ் பாடலில் காட்டிவிடுகிறார்கள். எந்த பாடல் என கண்டுபிடித்து பின்னூட்டத்தில் கூறுங்கள். அது எந்த பாடல் என இந்த பயணத்தின் கடைசி பதிவில் கூறுகிறேன்.        வழக்கம் போல இந்தமுறையும் பயணத்திற்கு துணையாய் வந்தவர் பத்ரி. அவருடன் அவருடைய அறை நண்பர் காசியும் சேர்ந்துகொண்டார். பெங்களூரில் இருந்து கிட்டத்தட்ட 400 KM தொலைவில் உள்ளது இந்த ஹம்பி. UNESCO World Heritageஆல் பரிந்துரைக்கப்பட்ட இடம். கூகிள் தேடுபொறியில் கர்நாடகா மாநிலத்தில் அதிகமாக தேடப்பட்ட இடம் என இந்த ஹம்பி தக்கவைத்துக்கொள்கிறது. பேருந்து பயணம் இவ்வளவு தூரம் ஒத்துவராது என எண்ணி தொடர்வண்டி பதிவு செய்தோம். தூங்கும் வசதி கொண்டது. வெள்ளி இரவு பெங்களூரில் இருந்து ஹோசபெட் வரை. பயணத்திற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு தொடர்வண்டி பதிவு செய்திருந்தோம். நீங்கள் பயணம் மேற்கொள்ள இன்னும் சற்று முன்பாகவே பதிவு செய்துகொள்ளுங்கள்.                    ஹோசபெட்டில் தங்குவதற்

ஓர் அற்புதமான பயணம்

                       பதிவு எழுதி நீண்ட நாட்கள் ஆகின்றது. அனைவரும் நலமா? இந்த இடைப்பட்ட காலங்களில் அதிகமான பயணங்கள் மேற்கொண்டேன். எழுதுவதற்கு(தட்டச்சு செய்ய) சிறிது சோம்பேறித்தனம்.  இருப்பினும் நான் சென்று வந்த இடங்களை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்க ஆவல்.        ஓர் அற்புதமான பயணத்திற்கு தயாராகுங்கள்.  =================================(காத்திருக்கவும்)=================

திரு திரு திரு பாகம் நான்கு

                     அன்னதானம் வழங்கும் இடம் லட்டு வாங்கும் இடத்திலிருந்து வலப்பக்கமாக ஒரு நூறு அடி தொலைவில் உள்ளது. உணவு அருந்துவதற்கு மிக சிறப்பாக பெரிய மஹால் போன்று கட்டியுள்ளனர். தைஇலையில் சுட சுட சாதம், சாம்பார்,  பொரியல், கூட்டு, ஒரு இனிப்புடன் ரசம், மோர் என பாத்திகட்டி அடிக்க சிறப்பாக பரிமாறுகின்றனர். இரண்டாம் முறையும் சாதம் பரிமாறுகின்றனர். கூச்சமேபடாமல் வாங்கிக்கொள்ளலாம்.                     சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தால் மிக உயரமான சுவரில் அழகிய ஓவியம் தீட்டியுள்ளனர். நாங்கள் கைபேசியை பெட்டகத்திலிருந்து எடுத்துவராததால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. அங்கிருந்து நேராக லட்டு வாங்க சென்றோம். வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது நம் காதோரமாக கூடுதல் லட்டு வேண்டுமா? கூடுதல் லட்டு வேண்டுமா? என ஒரு சிறுவன் வேகமாக நடந்துகொண்டே கேட்டுக்கொண்டு செல்கிறான். ஒரு சீட்டிற்கு ஐந்து லட்டு வாங்கிக்கொண்டு கைபேசி வாங்கும் இடத்திற்க்கு சென்று கைபேசி எடுத்துக்கொண்டு மலையிலிருந்து கீழிறங்கும் பேருந்தில் சென்று அமர்ந்தோம்.                  நேரம் இருந்த காரணத்தால் காலஹஸ்தி செல்ல தீர்மானி