ஐரா - பாகம் ஒன்று


                          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவு இட்டு  மாதக் கணக்காகிவிட்டது.  இந்த பதிவின் மூலம் நானும் ஆட்டத்துல இருக்கேன்னு சொல்லிக்கறேன். 

                          ஐராவதீஸ்வரர் கோவில். சிற்பங்களுக்கெல்லாம் கடவுள் என இந்தக்  கோவிலை தாராளமாகக்  கூறலாம். கும்பகோணத்தில் இருந்து ஒரு மணி நேர பயணமாக தாராசுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது இந்த ஐராவதீஸ்வரர் கோவில். பழைய பதிவில் கூறியது போல் விக்கிபீடியாவில் அனைத்து தகவலும் உள்ளது.  எனக்கு ஏற்பட்ட நினைவுகளை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கோவில் UNESCOவின் பராமரிப்பிர்க்குக் கீழ் வருகிறது. கோவிலை சுற்றி உள்ள தோட்டத்தின் பராமரிப்பு முறையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளமுடிகிறது. பொதுவாகவே கும்பகோணம் ஊரின் சுற்று வட்டாரம் முழுவதும் கோவில்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் இந்த ஐராவதீஸ்வரர் கோவில் மட்டும் தனித்துவம் வாய்ந்தது. காரணம் இந்த கோவில் இராஜ இராஜ சோழனால் கட்டப்பெற்றது. 

கோவிலின் வெளியில் இருந்துப் பார்க்கும்போது இந்த கோவிலின் சிறப்பு அவ்வளவு சிறப்பாகவா  இருக்குமா என்ன? என எண்ணத்தோன்றும். கோவிலின் உள்ளே சுற்றிச் சுற்றி பார்க்கும்போதுதான் நமது புருவம் வியப்பில் உயருவதை தவிர்க்கவே முடியாது. கண்கள் காண கோடி வேண்டும். அவ்வளவு அற்புதமான கல் சிற்பங்கள் வடித்து வைத்துள்ளனர். 




ஒரு பெரிய தெப்பக் குளம் போல இருக்கும் உள்ளிருப்பில் கோவில் அமைந்துள்ளது. வெளியில் நந்தி தேவன் வீற்றிருந்தான். பனிரெண்டு மணி வாக்கில் கோவிலை அடைந்ததால் நல்ல வெயில். வெளியில் அதிகமாக ஆட்கள் இல்லை. வேலை நாட்களில் சென்றதால் ஆட்கள் இல்லையா அல்லது இந்த கோவில்ல என்னத்த இருக்க போகுதுன்னு மக்கள் வரவில்லையா என தெரியவில்லை. இவ்வாறு கூறுவதற்கு காரணம் மூலவர் வீற்றிருக்கும் கோவில்கள் அனைத்திலும்(கும்பகோணம் சுற்றி உள்ள கோவில்களில்) கூட்டம் அலைமோதியது. ஆனால் இங்கு கூட்டமே இல்லாமல் இருப்பது சிறிது வருத்தமாக இருந்தது.  தூரத்தில் எங்களைப் பார்த்ததும் ஒரு சுற்றுலா வழி காட்டி எங்களுடன் தொற்றிக் கொண்டார். அரசு பதிவு பெற்ற சுற்றுலா வழி காட்டியெல்லாம் இல்லை. எங்களைப் பார்த்தவுடன் எங்களுடன் கலந்துவிட்டார். இது என்னடா இது பூனைய மடில கட்டிக்கிட்டு கூடவே கூட்டிட்டு போகிற கதை ஆகிவிடுமே என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் கோவிலின் தகவலை விவரிக்க விவரிக்க இவர் இல்லை என்றால் மேலோட்டமாக தான் பார்த்திருப்போம் என பின்னர் உரைத்தது. கோவில் வருவதற்கு முன்னர் விக்கிபீடியா மற்றும் எட்டாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகமும் சிறுது புரட்டிவிட்டு வந்திருந்தேன். ஆனால் புத்தகம் கை குடுக்கவில்லை. அதற்கான காரணம் வரும் பதிவுகளில் கூறுகிறேன்.....





>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>(தொடரும்)


                                         அட உங்கள தான்... போறது போறீங்க... அப்டியே இங்க ஒரு பின்னூட்டம் இட்டுட்டு போறது..........

Comments

  1. வழக்கம் போல அருமையான தொடக்கம். ஆவலை தூண்டிவிட்டீர்.

    ReplyDelete
  2. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி திருப்பதி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4