ஐரா - பாகம் மூன்று

          வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் சிற்பங்களின் சிறப்பு வெயிலின் தாக்கம் தெரியாதவாறு பார்த்துக்கொண்டது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடல் குடையும் காட்சி வடித்துள்ளனர்.



கோவில் முழுவதுமே நமது இதிகாசங்களை செவ்வனே செதுக்கியுள்ளனர். எத்துனை தலைமுறைகளாக இங்கு தங்கி சிற்பங்களை வடித்திருப்பார்கள் என எண்ணும்போது வியப்பாக இருக்கிறது. மகன், அப்பா, பாட்டன், முப்பாட்டன் என அனைத்து தலைமுறைகளும் இந்த கோவில் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் தங்க இருப்பிடம், உணவு என அனைத்தையும் மன்னன் பார்த்து பார்த்து செய்திருக்க வேண்டும்.

                     கோவிலின் அமைப்பு சிறந்த கட்டுமானத்திற்கான எடுத்துக்காட்டு. வெள்ளம் வந்தாலும் கோவிலை தாக்காது வண்ணம் நன்கு மேடை போன்று உயரமாக அமைத்துள்ளனர். நாம் கோவிலின் சுற்று சுவர் பக்க வாட்டில் நின்றால் நாம் சற்று உயரம் குறைவாக இருப்போம். வளைவுகளின் மடிப்பில் சிற்பியின் நேர்த்தி தெரிகிறது.



மேலே உள்ள படத்தில் சிறு சிறு துவாரங்களை அழகாக அமைத்துள்ளனர்.


தேர் சக்கரத்தின் பாகங்கள் இருண்டு துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டுள்ளது. குதிரையின் ஓட்டம் ரதத்தை இழுத்து செல்லும் பார்வை கிடைக்கும். குதிரையின் மேல் சிறு உருளை ஒன்று அமைத்துள்ளனர். குதிரையை லாவகமாக பிடிக்கும் பொருட்டு அமைத்துள்ளனர்.


                             
               அடுத்து மேலே உள்ள படத்தில் யானையின் தோற்றத்தில் வேறு சில விலங்குகளும் அமைத்துள்ளனர். யானையின் துதிக்கையில் முதலை, காதுகளில் முயல், யானையின் கழுத்துப்பகுதி பசுங்கன்று, கால்களில் யானை மற்றும் பசுமாடு, மான் இரண்டு கால்களை மேலே தூக்கி வைத்துள்ளது போன்று ஒரு உருவம் என அமைத்துள்ளனர்.




அடுத்து கீழே உள்ள படம் எனக்கு மிக பிடித்தது....



தூணின் கீழே உள்ள அமைப்பு மத்தளம் போன்றும் பானை போன்றும் அமைத்துள்ளனர்.

***********************************************************(தொடரும்)**********

Comments

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4