ஐரா - பாகம் நான்கு


           கோவிலைச் சுற்றி வரும்போது அழகான சுவர் சித்திரம் காண நேர்ந்தது. அஜந்தாவில் உள்ள ஓவியம் போன்று வரையப்பட்டது. கர்சிலைகளுக்கிடையில் ஓவியம் வரையப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.

                                                                   




பல உருவங்கள் அமையப்பெற்ற சிற்பங்கள் கீழே செதுக்கியுள்ளனர். யானை, குதிரை, சிங்கம், முதலை, எலி, கரடி போன்ற விலங்குகள் உள்ளன. 



கோவிலில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோபுர கலசங்கள் சீரமைக்க சாரங்கள் அமைத்திருந்தனர்.



மேலே உள்ள படத்தில் சற்று உற்று பார்த்தீர்களானால் வாயை திறந்த வாக்கில் ஒரு உருவம் இருக்கும். இது எதற்கு அப்படி அமைத்துள்ளனர் என்றால் மழை நீர் சேகரிப்பதற்காக. மேலிருந்து வடிந்து வரும் மழைநீரினை கீழே சேமித்து வைப்பதற்காக இந்த துவாரத்தை அமைத்துள்ளனர். அந்த காலத்திலேயே மழை நீர் சேமிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தியுள்ளனர்.

இன்னும் சுவாரஸ்யமான சில சிற்பங்கள் கீழே:












இந்த ஐராவதீஸ்வரர் கோவில் ஒவ்வொரு சிற்பங்களையும் மிக நுட்பமாக ஆழமாக ரசித்து பார்க்க வேண்டிய ஓர் அற்புதமான கலை சிற்பங்கள். அனைவரும் கிடைக்கும் நேரத்தில் கண்டிப்பாக தவறாமல் பார்க்க வேண்டிய இடம். இந்த கோவிலுடன் கங்கை கொண்ட சோழபுரமும் கண்டிப்பாக காண வேண்டிய இடம். ஆனால் அன்று நேரமின்மையால் பார்க்க முடியவில்லை. மற்றொரு நாள் கங்கை கொண்ட சோழபுரத்திற்காக கண்டிப்பாக செல்ல வேண்டும். எப்போது என்று தான் தெரியவில்லை. 

******************************************************(முற்றும்)***********
எப்போதும் போல பின்னூட்டம் எதிர்பார்கிறேன்....... 


Comments

  1. நேரில் கண்டதற்கு இணையான அனுபவம்..

    ReplyDelete
  2. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. நேரம் ஒதுக்கி தவறாமல் இந்த இடத்தைப் பார்த்து வரவும்...

    ReplyDelete
  3. after reading ur blog...i got some informations about ira temple...pictures superb siva..

    ReplyDelete
  4. after reading ur blog...i got some informations about ira temple...pictures superb siva..

    ReplyDelete
  5. Thanks a lot for your valuable feed back aishu...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4