ஐரா - பாகம் இரண்டு

               கோவிலின் உட்ப்ரகாரம் செல்லும் முன் மூன்று பாகங்களால் செய்யப்பட்ட கர்தேர் உள்ளது. படிமீது ஏறி கோவிலின் உள்ளே செல்லும் முன் அந்த படிகளில் அழகிய வேலைபாடு மிகுந்த சிற்பங்கள் உள்ளன. கீழே உள்ள புகைப்படத்தில் பார்த்தீர்களானால் தரை தளத்திற்கும் மேலே முதல் தளத்திருக்கும் எவ்வளவு உயரம் அமைத்து வடிவமைத்துள்ளனர் என காணலாம். இந்த இடைப்பட்ட இடத்தில் யானையின் உருவமுடன் வேறு உருவங்களும் உள்ளவாறு அமைத்துள்ளனர்.





               புகைப்படத்தில் சிறிது ஜூம்(தமிழ் சொல் தெரியவில்லை) செய்து பார்த்தீர்களானால் தலை துண்டிக்கப்பட்ட பாலகர் காணலாம். முகலாயர் படையெடுப்பில் வெட்டப்பட்டுள்ளது. யார் மீது என்ன கோவமோ....அழகான சிற்பங்களைச் சிதைத்துள்ளனர்.

                          படிகள் மீது ஏறிப் பார்த்தால் தூண்களிலும் மேற்கூரைகளிலும் சிற்பங்களை வடித்துள்ளனர். மேற்கூரை சிற்பங்கள் ஆச்சரியத்தை அளித்தது.







மேற்கூரைகளைப் பார்த்தீர்களானால் ஒட்டு போட்டதற்கான எந்த தடயங்களும் கிடையாது. ஒரே நேர் கோட்டில் மிக நீளமான கல்லினை அமைத்து செதுக்கியிருக்கக்கூடும். நினைத்துப் பாருங்கள். வீட்டில் அண்ணார்ந்து பார்த்து ஒரு ஆணி அடிப்பதற்குள் கழுத்து வலி பின்னி எடுத்துவிடும். எந்த விதமான driller களோ மின்சாரமோ இல்லாத காலத்தில் மேற்கூரையில் சிற்பங்களை வடித்துள்ளனர். அதுவும் கலைநயம் மிக்கவையாக அமையுமாறு செதுக்கயுள்ளனர். சோழனின் படைத்தளங்களையும் கோவிலின் சைவ மார்களின் பூஜைகளையும் செதுக்கியுள்ளனர். அது மட்டுமின்றி சிறு சிறு கதைகளையும் செதுக்கியுள்ளனர்.





                                                                       
     















                                         இந்த இரண்டு கற்தூண்களும் (Micro & Macro) கலை நுணுக்கத்திற்கான ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு ஆகும். இடப்பக்கம் உள்ள தூணில் அரை அடி அளவிற்கு உள்ள சதுர அளவில் பிள்ளையாரை வடித்துள்ளனர். பிள்ளையார் சிற்பம்,  நின்று கொண்டு நன்கு வசதியான நிலையில் வடித்துள்ளனர்.

                           அதற்கு நேர் எதிர் தூணில், தூணின் கீழ் பாகத்தில் அதே பிள்ளையாரின் உருவ அமைப்பை ஐந்து  அங்குல அளவில் வடித்துள்ளனர். பிள்ளையாரின் கண்கள், துதிக்கை, பூணூல், கை விரித்து வைத்துள்ள அமைப்பு என பெரிய தூணில் வடித்ததை போன்று சிறிய தூணிலும் அமைத்துள்ளனர். உளியின் அளவு எவ்வளவு சிறியதாக இருந்திருக்கக்கூடும். வடித்த சிற்பியின் உழைப்பு எவ்வளவு இருந்திருக்கும். இந்த செய்திகள் உடன் வந்த சுற்றுலா வழிகாட்டியின் மூலம் தெரிந்து கொண்டோம்....


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>(தொடரும்)>>>>>


படிச்சிட்டு சும்மா போன எப்படி? போறது போறீங்க.. அப்டியே ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்க மக்களே!                      








Comments

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4